சினிமா செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைப் பார்க்க சேப்பாக்கத்திற்கு வந்த குந்தவை
சினிமா செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைப் பார்க்க சேப்பாக்கத்திற்கு வந்த 'குந்தவை'

தினத்தந்தி
|
12 April 2023 10:22 PM IST

சென்னை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டத்தைக் காண நடிகை திரிஷா சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு இந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இந்த ஆட்டத்தைக் காண திரை பிரபலங்களும் வருகை தந்துள்ளனர். பொன்னியின் செல்வனில் 'குந்தவை'யாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த திரிஷா, சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தார். மேலும் நடிகர் சதீஷ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்டோர் ஆட்டத்தை நேரில் காண வருகை தந்தனர்.



மேலும் செய்திகள்